மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அம்மாநில பாஜக மந்திரி மகேந்திர சிங் சிசோசியா நேற்று ருதியா பகுதியில் நடந்த நகராட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களே கேளுங்கள்… பாஜகவில் சேர்ந்துவிடுங்கள். இந்த பக்கம் மெதுவாக வந்துவிடுங்கள். 2023-ம் ஆண்டும் மத்தியபிரதேசத்தில் பாஜக தான் மீண்டும் ஆட்சியமைக்கப்போகிறது. முதல்-மந்திரியின் புல்டோசர் தயாராக உள்ளது’ என்றார். பாஜகவில் சேர்ந்துவிடுங்கள் இல்லையேல் முதல்-மந்திரியின் புல்டோசர் தயாராக உள்ளது என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாஜக மந்திரி மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.