கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டம் மற்றும் மாற்றத்திற்கான மாநாடு என பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டம் நடந்த திருவள்ளூர் மைதானத்தில் பொமக்கள் அமரும் வகையில் சுமார் 8500 சேர்கள் போடப்பட்டு இருந்தது. மேடையின் முன் பகுதியில் போடப்பட்டிருந்த சேரில் மட்டுமே கூட்டம் இருந்தது. பின்புறம் கூட்டம் இல்லாமல் சேர்கள் காலியாக இருந்தன. மேலும்,
மாற்றத்திற்கான மாநாடு குறித்து பாஜ தலைவர்அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது மக்கள் சாரை சாரையாக வேன்களை பார்த்து நடக்க ஆரம்பித்தனர்.. அண்ணாமலை பேசி முடிக்கும் போது சுமார் 500 பேர் மட்டுமே இருந்தாக கூறப்படுகிறது. தனது சொந்தமான மாவட்டமான கரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை மாநிலத்தலைவர் அண்ணாமலை பெரிதும் எதிர்பார்த்தாகவும்., ஆனால் பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு இல்லாததால் அவர் அப்செட்டானதாக கரூர் பாஜகவினர் கூறுகின்றனர்..