Skip to content
Home » 80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

80 % தள்ளுபடியில் மருந்துகள், 2036ல் ஓலிம்பிக்ஸ்.. பாஜ தேர்தல் அறிக்கை..

வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். அம்பேத்கார் பிறந்த நாளான இன்று வெளியாகியுள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை  ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேர்தல் அறிக்கையில் அமைந்துள்ள முக்கிய அம்சங்கள்..

  • நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்
  • 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்
  • 2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.
  • 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்
  • திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்
  • இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்
  • மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.
  • முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *