அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
அரியானா மாநிலத்தின் அட்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக மத்திய மந்திரி ராவ் இந்திரஜித் சிங்கின் மகள் ஆர்த்தி சிங் ராவ் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் மாநில பாஜக மகளிர் அணி துணைத்தலைவர் சந்தோஷ் யாதவ் நிறுத்தப்படலாம் என கூறப்பட்ட நிலையில் ஆர்த்தி சிங் ராவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் யாதவ் பாஜகவில் இருந்து நேற்று விலகினார். இவர் துணை சபாநாயகராகவும் பணியாற்றியவர்.
.