திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றங்களுக்கும் பொது்தேர்தல் நடந்தது. திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. அந்த இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னணியில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவர்கள் தெரிவிக்கின்றன.
திரிபுராவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் பாஜக 27 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூ19 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
நாகாலாந்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 47 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.அதே நேரத்தில் மேகாலயாவில் மொத்தம் உள்ள 60 இடங்களில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் இழுபறி நிலைமையில் உள்ளன. மாநில கட்சியான என்பிபி 10 இடங்களில் முன்னணியில் உள்ளது.