மராட்டியம், ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுடன் கேரளாவின் வயநாடு, மராட்டியத்தின் நாண்டட் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் மொத்த்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையில் (மகா விகாஸ் அகாடி)ஒரு கூட்டணியும், பாஜக சார்பில் (மகாயுதி) ஒரு கூட்டணியும் போட்டியிட்டன.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. மராட்டியத்தில் ஆரம்பம் முதல் பாஜக கூட்டணி முன்னணியில் இருந்தது. காலை 9.30 மணி தகவலின்படி பா.ஜனதா கூட்டணி: 96 காங்கிரஸ் கூட்டணி – 54 பிற கட்சிகள் -6 தொகுதிகளிலும் முன்னணியில் இருந்தன.
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்டில் பா.ஜனதா கூட்டணி – 28 ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம். எம்.) கூட்டணி – 15 பிற கட்சிகள் – 0 என்ற அளவில் முன்னணியில் இருந்தனர். அனைத்து தொகுதிகளிலுமே இதே நிலைதான் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் பிாியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியில் பிரியங்கா முதல் சுற்றிலேயே முன்னணியில் இருகிறார்.