இந்தியா முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இன்று ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. தமிழ்நாட்டில் நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தபால் ஓட்டுகளில் அதிகம் பெற்றார். மற்ற தொகுதி்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே தபால் ஓட்டுகளில் அதிகம் பெற்றிருந்தனர்.
அதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு மேல் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதன்படி தமிழ்நாட்டில் நெல்லை உள்பட அனைத்து தொகுதிகளிலும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னணியில் உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை பாஜக அதிக இடங்களில் முன்னணியில் உள்ளது. அதாவது 300 தொகுதிகளில் பாஜக முன்னணியில் உள்ளது. இந்தியா கூட்டணி 175 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. குஜராத் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக 25 இடங்களிலும் காங்கிரஸ்2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது. ஒடிசா மக்களவை தொகுதியிலும் பாஜகவே முன்னணியில் உள்ளது.
கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் அமைச்சர் முருகன் ஆகிய பாஜக வேட்பாளர்களும் பின்னடைவை சந்தித்து உள்ளனர். அதே நேரத்தில் புதுச்சேரியில் பாஜக முன்னிலையில் உள்ளது. இமாச்சலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நடிகை கங்கனா முன்னணியில் உள்ளார். தூத்துக்குடியில் கனிமொழி முன்னணியில் உள்ளார். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரைவைகோ முன்னணியில் உள்ளார்.
வயநாட்டில் ராகுல் காந்தியும், வாரணாசியில் பிரதமர் மோடியும் முன்னிலையில் உள்ளனர். உ.பி.யில் இந்தியா கூட்டணி 22 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மற்ற தொகுதிகளில் பாஜக அமோகமாக முன்னணியில் உள்ளது. கேரளாவில் பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி பின்தங்கியுள்ளார்.