Skip to content
Home » சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

சென்னை பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு விலகல்….அதிமுகவில் சேர முடிவு

  • by Authour

பாஜக மாநில  தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர்  நிர்மல்குமார் சில தினங்களுக்கு முன் அந்த கட்சியில் இருந்து விலகி  அதிமுகபவில் இணைந்தார். அதைத்தெடர்ந்து   மாநில செயலாளர்  திலிப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை  மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில் நட்பம் மற்றும் சமூக ஊடகப்பரிவு  மாவட்ட தலைவர்  ஒரத்தி அன்பரசு மற்றும் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கூண்டோடு பாஜகவுக்கு முழுக்கு போட்டு விட்டனர்.  திடீரென பாஜகவுக்கு முழுக்கு போட்ட ஒரத்தி  அன்பரசு உள்ளிட்ட அனைவரும் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செய்தி தொகட்சியில் சிலகாலமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வந்த நிலையில் ஒரு சில தினங்களாக பலர் என்னை தொடர்பு கொண்டு சில விளக்கங்களை கேட்க ஒரே சமயத்தில் அழைக்க முற்படும்பொழுது சிலருக்கு விளக்கம் அளிக்க முடியாத நிலை உருவாகிறது.

ஆகவே என்னுடைய நிலையை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை தற்பொழுது எனக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாஜக-வில் பயணித்துள்ளேன். அதில் கட்சி பொறுப்பு என்பது ஒரு சில ஆண்டுகள்தான். பதவி என்பதை எதிர்பார்த்து பணிபுரிபவன் அல்ல என்பது என்னை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். என் பணிகளை அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இத்தனை காலம் எனக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் புகார்களையும் எவ்வாறு நாள் எதிர்கொண்டேன் என்று எண்ணி பார்க்கையில் எனக்கே வியப்பாக இருக்கிறது. தகுதியற்றவன் என்று கூறி தரம் பிரிக்கும் சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளுக்கு பலியாக விரும்பவில்லை. துஷ்ட சக்திகளிடம் இருந்து காத்துக் கொள்ளும் பரிகாரமாகவே இதை செய்கிறேன்.  . தொடர்ந்து என் மீது அன்பு காட்டி வரும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வான நன்றிகள்.

என்னுடன் கட்சியில் இணைந்து பணி செய்து வரும் அன்பு சகோதரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் அவர்களது வலியுறுத்தலின் பேரிலும் அன்புக்குரிய தலைவர்  நிர்மல் குமார் அவர்களுடன் அரசியல் பாதையில் பயணிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

நிர்மல்குமார் பாதையில் பயணிப்பது என முடிவு செய்யப்படுகிறது என அறிக்கையில் கூறி உள்ளதால் அனைவரும் அதிமுகவில் இணைவார்கள் என தெரிகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *