கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு கர்நாடகத்தின் சில பகுதிகளில் கடந்த காலங்களில் செல்வாக்கு இருந்தது. ஆனால் அந்த கட்சி பதவிக்காக மட்டுமே செயல்படுகிறது. எந்த கொள்கையோ, லட்சியமோ இல்லாத கட்சி என அந்த பகுதி மக்களே சட்டமன்ற தேர்தலில் மஜதவை புறக்கணித்தனர்.
மீண்டும் எப்படியும் புத்துயிர் பெற வேண்டும் என இப்போது பாஜகவுடன் அந்த கட்சி கூட்டணி அமைத்துஉள்ளது என கர்நாடக மக்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.