சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளராக இருப்பவர் எஸ்.சுப்பையா. இவர் நங்கநல்லூரில் கட்சிஅலுவலகம் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவரது ஓட்டலில் சுப்பையா நண்பர்களுடன் அமர்ந்து பல்வேறு சைடிஸ்களுடன் மதுபானம் அருந்துக்கொண்டிருந்தார். இந்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்ததும் சுப்பையா கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
இந்த நிலையில், சுப்பையா மற்றும் மண்டல் தலைவர் ஜவகர், ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுப்பையாவின் சகோதரி மகன் முத்தரசன் ஆகியோர் சென்று சென்னை கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் வி.ராஜேஷ் என்பவரை நங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து தகாதவார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள், ‘’நாங்கள் மது அருந்துவது போன்ற வீடியோக்கள் நீ கொடுத்துதான் சமூகவலை தளத்தில் வெளிவந்து உள்ளது’’ என்று கூறி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடியபோது அவரது சட்டையை கிழித்து மேலும் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து ராஜேஷ் கொடுத்துள்ள புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வந்து விசாரித்தனர். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..