Skip to content
Home » பா.ஜ. மையக்குழு கூட்டம் …. கடலூரில் நாளை நடக்கிறது

பா.ஜ. மையக்குழு கூட்டம் …. கடலூரில் நாளை நடக்கிறது

  • by Senthil

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வெ.ரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பான பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நாளை கடலூரில் நடைபெற உள்ளது. கூட்ட முடிவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. இந்நிலையில்  நாளை மாலை மையக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!