பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே நேற்று வெளியிட்டார். இதில் உத்தரப் பிரதேசத்தில் 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள், மேற்கு வங்கத்தில் 20, டெல்லியில் 5, கோவா மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள். இந்த முதல்கட்ட பட்டியலில் மத்திய அமைச்சர்கள் 34 பேர், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 28 பெண் வேட்பாளர்கள், 47 இளம் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள்.
இந்த பட்டியலில் உள்ள முக்கிய வேட்பாளர்கள் பற்றிய விபரம்..
பிரதமர் நரேந்திர மோடி -வாரணாசி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா- குஜராத்தின் காந்தி நகர்
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா- போர்பந்தர்
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்-அசாமின் திப்ருகர்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ- அருணாச்சலப் பிரதேசம் (மேற்கு)
- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் – ஜம்மு காஷ்மீரின் உதம்பூர்
- பர்ஷோத்தம் ரூபாலா – குஜராத்தின் ராஜ்கோட்
- பிப்லப் தேப் குமார் – திரிபுரா மேற்கு
- ஹேமமாலினி – உத்தரப் பிரதேசத்தின் மதுரா
- ராஜ்நாத் சிங் – லக்னோ
- ஸ்மிரிதி இரானி – அமேதி
- சாத்வி நிரஞ்சன் ஜோதி – ஃபதேபூர்
- ஜகதாம்பிகா பால் – தொமரியாகஞ்ச்
- அர்ஜூன் முண்டா – ஜார்க்கண்ட்டின் குண்டி (தனி)
டாக்டர் அப்துல் சலாம் – கேரளாவின் மலப்புரம்
எம்.டி.ரமேஷ் – கோழிக்கோடு
அஷ்வினி – காசர்கோடு
ரகுநாத் – கன்னூர்
பிரபுல்ல கிருஷ்ணா – வடகரா
நிவேதிதா சுப்ரமணியன் – பொன்னானி
- மலையாள நடிகர் சுரேஷ் கோபி – திருச்சூர்
- கிருஷ்ணகுமார் – பாலக்காடு
- ஷோபா சுரேந்திரன் – ஆலப்புழா
- அனில் ஆண்டனி – பதனம்திட்டா
- வி.முரளிதரன் – அட்டிங்கல்
- ராஜிவ் சந்திரசேகர் – திருவனந்தபுரம்
- ஜோதிராதித்ய சிந்தியா – மத்தியப் பிரதேசத்தின் குணா
- சிவராஜ் சிங் சவுகான் – விதிஷா
- அர்ஜூன் ராம் மேக்வால் – ராஜஸ்தானின் பிகானிர்(தனி)
- கஜேந்திர சிங் ஷெகாவத் – ஜோத்பூர்
- சபாநாயகர் ஓம் பிர்லா – கோடா
- துஷ்யந்த் சிங் – ஜலாவர் பரன்
- பண்டி சஞ்சய் குமார் – தெலங்கானாவின் கரிம்நகர்
- ஜி. கிஷன் ரெட்டி – செகந்தராபாத்