திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது..
பாஜகவை எதிர்க்கும் வலிமை திமுக கூட்டணிக்கு உண்டு… நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பிரசார பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும் . மதவெறி அரசியல் பாஜகவை எதிர்கொள்ளக்கூடிய வலிமை திமுக கூட்டணிக்கு உண்டு. உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் தலைப்பில் ”பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்” என்ற முழுக்கத்துடன் கூட்டம் நடைபெறும். மக்களின் எதிரிகளான பாஜக, அதிமுகவை அம்பலப்படுத்த வேண்டிய கடமை திமுகவினருக்கு உள்ளது. உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலம் இந்தியாவை காக்க வேண்டிய கடமை பொறுப்பு உள்ளது.