கடலூரில் இன்று பாஜ செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை, மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் ரெட்டி, பொருளாளர் வேகன், பொதுச் செயலாளர் கேவச விநாயகம், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஜி20 மாநாட்டு பணிகள், பிரதமரின் மன்கி பாத் நிகழ்வு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக கவர்னரை சட்டசபையில் ஒருமையில் பேசியதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவில்லை என்றார். ஈரோடு தேர்தலில் பாஜ போட்டியிடாது என்றும், அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது.