அரசியல் பொருளாதார நிபுணரும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“தேர்தல் பத்திரங்கள்விவகாரம் மிகப்பெரிய அளவில் உருவெடுக்கும் என்று நினைக்கிறேன். இந்த விவகாரம் காரணமாக பா.ஜ.க. மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்கள் இடையே தான் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மற்றும் இதர அரசியல் கட்சிகளோ அல்லது அவற்றின் கூட்டணிகள் இடையிலோ இருக்காது.” “தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தற்போதுஇருப்பதை விட அதிகளவில் பூதாகாரமாக உருவெடுக்கும். இந்த விவகாரம் பா.ஜ.க. மற்றும் மத்திய அரசை கடந்து பொது மக்களிடம் அதிவேகமாக சென்றடைய துவங்கிவிட்டது. இந்த தேர்தல் பத்திரங்கள் விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய ஊழல் என்று புரிய துவங்கிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் விவகாரம் தொடர்பாக இந்த அரசு மிகப்பெரிய தண்டனையை பெறும் என்று நான் நினைக்கிறேன்,” என்று தெரிவித்தார்.