திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியினர் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாஜகவை சேர்ந்த தர்விந்தர்சிங்மர்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்திக்கு எதிராக வெளிப்படையாக மிரட்டல் விடுத்தும், எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட நிலைதான் நீங்களும் சந்திக்க நேரிடும் என மிரட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் என்று பாராமல் அவரை பயங்கரவாதி என தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்,
இதேபோல் மகாராஷ்டிராவில் பாஜகவில் கூட்டணியில் சேர்ந்த எம்எல்ஏ சஞ்சய் கைவர்ட், ரயில்வே இணை அமைச்சர் ரவனித்பிட்டு, உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜுசிங், தமிழகத்தை சேர்ந்த தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜா ஆகியோர் தொடர்ந்து ராகுல் காந்தியை இழிவு படுத்தியும், தேசவிரோதி என்று கூறி வருகின்றனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவித்துள்ளார்