மக்களவை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி எழுச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் 8ம் தேதி பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதையொட்டி டில்லியில் பாஜகவின் முதல் அமைச்சர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநில முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் ஆலோசனை கூட்டம் வருகிற 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. டில்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில், கூட்டணியில் உள்ள முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள்பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாநிலங்களில் பின்னடைவு, அதன் காரணம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக உ.பி. தோல்வி குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது. காரணம் பாஜகவின் பின்னடைவுக்கு உ.பி. தேர்தல் முடிவு தான் காரணம். அநேகமாக விரைவில் உ.பி. முதல்வரை மாற்றுவது குறித்தும் பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.