கலைஞர் நாணய வெளியீட்டு விழாவிற்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் ஏதோ பாஜகவுன் உறவு வைத்துக்கொள்ள போகிறோம் என்ற கோணத்தில் பேசுகிறார்கள். நாங்கள் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எதிர்த்தாலும், ஆதரித்தாலும் திமுக எப்போதும் அதன் கொள்கையோடு இருக்கும். பழனிசாமி மாதிரி ஊர்ந்து, பதுங்கி பதவி வாங்குகிற புத்தி திமுகவிற்கு கிடையாது. நிச்சயமாக உறுதியாக அண்ணாவின் மீது ஆணையாக சொல்கிறேன் நமக்கென்று இருக்கிற உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.