நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பாஜக 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை கடந்த 1ம் தேதி வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமி்ழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இன்னும் பாஜக வெளியிடவில்லை.
இந்த நிலையில், பா.ஜனதாவின் உயர்மட்டக்குழு கூட்டம் நாளை டில்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறது. இதில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதன்படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.