Skip to content
Home » 15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

15 ஆண்டுகளுக்கு பின்….. பிஜூ ஜனதா தளம்….. பாஜகவுடன் கூட்டணி

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கி விட்டன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒடிசா ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 2009ம் ஆண்டு வரை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு தொகுதிபங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிஜு ஜனதா தளம் விலகியது.

 

ஆனால், தற்போது நாடாளுமன்ற தேர்தல், ஒடிசா சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.க. – பிஜு ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பிஜு ஜனதா தள மூத்த தலைவர்கள் நேற்று நவீன்பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தினர்.

அதேபோல், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் பிஜுஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!