Skip to content

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியது அழகல்ல. திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் உறவினர்களைபோல் வாழ்ந்து வருகின்றனர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினரே இல்லை. போராடியவர்களை இந்து அமைப்பினர் என கூறக் கூடாது. பாஜகவினர்தான் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருப்பரங்குன்றம் பிரச்சனை தேவையற்ற பிரச்சனை என்று அப்பகுதி மக்களே கருத்து சொல்கிறார்கள். வட மாநில​த்தைப் போல கலவரத்தை ஏற்படுத்த பாஜகவினர் முயற்சிக்கிறார்கள், அது தமிழகத்தில் நடக்காது

அனைத்து மதத்தினரும் ஒற்றுமையோடு இருக்கும் தமிழ்நாட்டில், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் பாஜக செயல்படுகிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் பாஜக முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகம் திராவிட மண்… இதுபோன்ற கலவர முயற்சியை அனுமதிக்காது” என்றார்.

error: Content is protected !!