திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் சங்கீதா என்பவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக கூறினார். இதனால் சங்கீதாவை பாஜகவினர் கெட்ட வார்த்தைகளால் திட்டினர்.
சிறிது நேரத்தில் வேட்பாளர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அவர் 50 அடி தூரம் தான் சென்றிருப்பார். அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் திபுதிபு வென சங்கீதாவின் கடைக்குள் புகுந்து, சங்கீதாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். அங்கிருந்த பொருட்கள், ஜவுளிகளை அள்ளி தெருவில் வீசினர். எங்களிடம் கேள்வியா கேட்கிறாய் நீ இந்த உலகத்தி்லேயே இருக்க முடியாது. இந்தியா முழுவதும் எங்கள் ஆட்சி தான், எங்களை எந்த போலீசும் ஒன்றும் செய்யாது என கூறிவிட்டு போய்விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சங்கீதா போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக சின்னசாமி மற்றும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.