சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தன்னைத்தான் 6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போவதாகவும், 48 நாள் விரதம் இருக்கப்போவதாகவும், காலில் செருப்பு அணிவதில்லை என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
அதன்படி இன்று காலை அவர் முருகனுக்கு விரதம் மேற்கொண்ட பக்தர் போல அண்ணாமலை பச்சை வேட்டி, பச்சை துண்டு அணிந்திருந்தார். வேட்டி மட்டும் கட்டியிருந்த நிலையில், கோவை காளப்பட்டி சாலையில் நடு வீதியில் நின்று சட்டை அணியாமல் வேட்டி மட்டும் அணிந்திருந்த நிலையில்
இறைவனை வேண்டி நின்றார். அப்போது ஒருவர் ஒரு தட்டில் வைத்திருந்த சாட்டையை கொண்டு வந்து கொடுத்தார்.
அதை எடுத்து தன்னைத்தான் 8 முறை அடித்துக்கொண்டார். அப்போது ஒருவர் ஓடிவந்து பிடித்துக்கொண்டார். அத்துடன் சாட்டை அடியை நிறுத்திக்கொண்டு துண்டை எடுத்து போர்த்திக் கொண்டு பேட்டி அளித்தார். அப்போது இன்று நடைபெறுவதாக இருந்த போராட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அரசு துக்கம் கொண்டாடுவதால், போராட்டம் இன்று ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுவதாகவும் கூறினார்.