பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில்ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். நகர செயலாளர் சரவணன், மருத்துவ பிரிவு செயலாளர் துரை கோ. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி ஐடி விங் மண்டல பொறுப்பாளர் நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் விளக்கமாறு கையில் நாகராஜன், அமைப்பு செயலாளர் காந்தி, விவசாய பிரிவு துணை செயலாளர் சிங். ஜெகதீசன், இணை செயலாளர ராஜமாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை அதிமுகவினர் எரிக்க முயற்சி செய்தனர்
அப்போது போலீசார் பொம்மையை கைப்பற்ற முயற்சி செய்தனர். இதில் போலீஸா இருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண் காவலர் நாகராணி கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை கூட்டுமாறால் அடித்தனர். அதனால பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அதிமுகவில் இருந்து உருவ பொம்மை பறித்து தண்ணீர் ஊற்றினர். பகுதி செயலாளர்கள் மனோகரன், பஞ்சு, புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும்மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.