Skip to content
Home » எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு, அண்ணாமலை திடீர் கண்டிஷன்….. ஒரே வேட்பாளரை நிறுத்துங்கள்

  • by Authour

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.  அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி. அந்த கட்சி ஈரோடு கிழக்கில் பலமுறை வெற்றி பெற்றுள்ளது. பலர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். அண்ணன் ஓபிஎஸ் என்னை சந்தித்து பேசினார். இடைத்தேர்தலில்
நிற்க கூடிய வேட்பாளர் பண பலம் , படைபலம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும் , அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு , பாஜக வின் நிலைப்பாடு

நிற்ககூடிய ஒரு வேட்பாளரை வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை.

திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும் , மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம்.கூட்டணி மரபு, தர்மப்படி அனைவரும் நடந்து கொண்டால் தான்  கட்சிகளுக்கு மரியாதை.

திருச்செந்தூர் கோவில் 5309 மாடுகளை காணோம். 1302 கோடி கணக்கு வழக்கில் குறைகள் உள்ளது. 15 லட்சம் லட்சம் பில்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. இது இல்லை என்று அவர் இதுவரை கூறவில்லை. நான் கேட்கும் கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இல்லை. ஒரு திருக்கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை அந்த கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் .

இவ்வாறு அவர் கூறினார்.

 

இந்த பேட்டியின் மூலம்  எடப்பாடி, ஓபிஎஸ் இருவருக்கும் மறைமுகமாக அண்ணாமலை ஒரு நிபந்தனை விதித்து உள்ளார். அதில்  இருவரும் சேர்ந்து ஒரே  வேட்பாளரைத்தான் நிறுத்த வேண்டும் என்று கூறியதன் மூலம் அவர் இரு அணிகளும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்ற  கண்டிஷனை மறைமுகமாக விதித்து உள்ளார்.  அதே நேரத்தில் அங்கு பா.ஜ.க. போட்டியிடும் நிலையில் இல்லை என்பதையும் மறைமுகமாக கூறி விட்டார். எனவே அதிமுக -பாஜ.க. கூட்டணியில் இன்னும்  குழப்பமான நிலை தான்  நீடிக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *