பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை மேலும் ஒரு வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் முதல்வர் படத்திற்கு பதில் பிரதமர் படம் ஒட்டியதாக
புகார் எழுந்தது. இப்புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்தனர். ஏற்கனவே பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.