லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும், தி.மு.க., கூட்டணி கைப்பற்றி அபாய வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், திமுகவிற்கு கடந்த லோக்சபா தேர்தலை விட, வாக்குவிதம் சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல, அ.தி.மு.க.,வும் கடும் சரிவை கண்டுள்ளது. 39 லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட, 234 சட்டசபை தொகுதிகளில், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, எடப்பாடி, சங்ககிரி, பரமத்திவேலுார், குமாரபாளையம், அரியலுார், ஜெயங்கொண்டம், திருமங்கலம், விருதுநகர் ஆகிய 10 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல் பாஜ கூட்டணியில் 10 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்ட பாமக தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளது.
மொத்தம், 234 சட்டசபை தொகுதிகளில், இதுவரை இல்லாத வகையில், 81 சட்டசபை தொகுதிகளில், திமுகவிற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., கூட்டணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தென்மாவட்டங்களில், சில சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.