பாஜ கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஐகேஜே, புதிய நீதி கட்சி, த மமுக, ஓபிஎஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் பாமகவிற்கு 10 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு விட்டன. இன்றைய தினம் அமமுகவி்ற்கு 2 சீட்டுகளும், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஒரு சீட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் தமாகா மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் சீட்டு பங்கீடு குறித்து பாஜ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜிகே வாசனிடம் 2 சீட்டு என பாஜக தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இப்போது வந்தவர்களுக்கும் 2 எனக்கும் இரண்டுதானா? என வாசன் வருதத்தை தெரிவிக்க சரி உங்களுக்கு 3 என பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சரி 3 என்றால் எந்தெந்த தொகுதிகள் என வாசன் கேட்க பாஜக தரப்பில் சென்னை 1, டெல்டா 1 தென் மாவட்டங்களில் 1 என கூறியுள்ளனர். அப்போது வாசன் தனக்கு தஞ்சை அவசியம் வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் பாஜ தரப்போ எங்களுக்கும் தஞ்சை தேவைப்படுகிறது. டிடிவியும் கேட்கிறார் என கூற வாசன் பிறகு பேசிக்கொள்ளலாம் என கூறி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது. அதேபோல் பேச்சுவார்த்தைக்கு வந்த ஓபிஎஸ் தனக்கு தேவையான 13 தொகுதிகளின் பட்டியலை பாஜ தரப்பில் கொடுத்துள்ளார். அதை வாங்கி வைத்துக்கொண்ட பாஜக தரப்பு 1 சீட்டு தான் உங்களுக்கு என கூற அதிர்ச்சியடைந்த ஒபிஎஸ் தனது ஆதரவாளரான ஜேசிடி பிரபாகரனுக்காக வட சென்னை, வைத்தியலிங்கத்திற்காக தஞ்சை, தனது மகன் ராமநாதபுரம் அல்லது விருதுநகர் அவசியம் வேண்டும் என கூறியுள்ளார். தஞ்சையை கொடுக்க வாய்ப்பு இல்லை என பாஜக கூறிவிட்டதால் ஓபிஎஸ் இது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். இப்படியாக தஞ்சை தொகுதி யாருக்கு என்பதில் குழப்பம் தொடர்வதால் பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
அந்த ஒரு சீட்டுக்காக பாஜ கூட்டணியில் 3 கட்சிகள் மல்லுக்கட்டு…
- by Authour