டில்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக ஆட்சியை வீழ்த்த, அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். கூட்டணியில் எந்த கட்சியும் நிலையாக இருந்ததில்லை. அதிமுகவுக்கு எதிரி திமுகதான். அரசியலில் சூழலுக்கு தகுந்தாற்போல கூட்டணி அமையும். அமித்ஷாவை சந்தித்தது குறித்து தெளிவாக ஏற்கனவே பேட்டி கொடுத்து விட்டேன். கூட்டணியில் எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை. கூட்டணி அமைக்கும்போது அதை உங்களுக்குதெரிவிப்பேன்.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது, அது அவரது கருத்து என்ற எடப்பாடி, பாஜகவுடன் கூட்டணி ஆடசியை ஏற்பீா்களா என கேட்டதற்கு பதில் சொல்லாமல் சென்று விட்டார்.