Skip to content
Home » காஷ்மீர்….பாஜ வேட்பாளர் பட்டியல்…. வெளியிட்ட உடன் வாபஸ்

காஷ்மீர்….பாஜ வேட்பாளர் பட்டியல்…. வெளியிட்ட உடன் வாபஸ்

  • by Senthil

ஜம்மு காஷ்மீரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வரும் செப்டம்பர் 18-ம் தேதி,செப். 25-ம் தேதி, அக். 1-ம் தேதி என மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், ராஜ்போராவில் இருந்து அர்ஷித் பட், சோபியானில் ஜாவேத் அகமது, அனந்தநாக் மேற்கில் முகமது ரஃபீக் வானி, வழக்கறிஞர் சையது வசாஹத் அனந்தநாகில் இருந்தும், கிஷ்தாவரில் இருந்து சுஷ்ரி சாகுன் பரிஹாரும், டோடாவில் இருந்து கஞய் சிங் ரானாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனால் ஜம்மு காஷ்மீர் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்த நிலையில் சில நிமிடங்களிலேயே வேட்பாளர் பட்டியல் வாபஸ் பெறப்பட்டது. விவரம் அறிந்த கட்சி வட்டாரங்கள், முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை மட்டுமே அறிவிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் தவறுதலாக 2 மற்றும் 3 ஆம் கட்ட தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட பட்டியலும் வெளியானதால் வாபஸ் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

\மேலும், ஜம்மு காஷ்மீர் தேர்தல் பணிகளுக்காக 298 கம்பெனி துணை ராணுவப்படைகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!