Skip to content
Home » முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச். ராஜா கைது.. வீடியோ..

  • by Senthil

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் எச் ராஜா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து எச் ராஜா பங்கேற்றால் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர். அதன்படி அங்கு காரில் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதையடுத்து அவர் அங்குள்ள மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!