கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அமைந்துள்ள சுங்க கேட் பேருந்து நிறுத்தத்தில் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தீப்பந்தம், மெழுகுவர்த்தி
ஏந்தி மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரபாகர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வேலை செய்வதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் அதானிக்கு எல் ஐ சி ,எஸ் பி ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இருந்து கடன்களை வாரி வழங்கி உள்ளதாகவும், தற்போது எல்ஐசி யின் 2000 கோடி ரூபாய் பணம் அதானிக்கு வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரர்களின் வரிசையில் 69வது இடத்தில் இருந்த அவர் இரண்டாவது இடத்திற்கு எவ்வாறு முன்னேறினார் என்றும்,
மக்கள் முன்பு பிரதமர் மோடி காங்கிரஸ் குறித்து பல்வேறு பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், காங்கிரசார் இந்திய நாட்டில் அரசுடமையாக்கிய பல்வேறு பொது நிறுவனங்களை தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி, அமித்ஷா தாரை வார்த்து வருவதாகவும்,
தேர்தல் காலத்தில் வருடத்திற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதாக கூறிய மோடி அரசு தற்போது வரை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கி தரவில்லை எனவும்,
இதனை மக்களவையில் கேட்ட எம் பி ராகுல் காந்தியை அவசரக்கதியில் ஒரு பொய்யான வழக்கில் தீர்ப்பை வழங்க செய்து அவரது எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ய பாஜக அரசு முனைப்பு காட்டியதாகவும்,
வரும் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும்,
ஆருத்ரா தங்க நகை 2438 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதில் பாஜக நிர்வாகி சுரேஷ் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும், ஆருத்ரா நிறுவனத்தினுடைய காப்பாற்றுவதற்காக அண்ணாமலை அந்த பணத்தினை வாங்கிக்கொண்டு அதை வைத்து அரசியல் செய்வதாகவும், இதுகுறித்து கேட்டால் தாங்கள் அப்படி இல்லை என்று மழுப்பி வருவதாகவும்,
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கேஸ் பெட்ரோல் விலை அதிகரிக்க கூடிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் தற்போது கேஸ் ரூபாய் 1200க்கும், பெட்ரோல் 104 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் கேஸ் விலையினை குறைப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி அதனை ஏன் செய்யவில்லை எனவும் நாளை தமிழகம் வர உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கருப்பு கொடி காட்டப்படுவதாகவும், அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் தங்களின் வீடுகளின் முன்பு கருப்பு கொடியை கட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கூறினார்.
மேலும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சியினர் தொண்டர்கள் பலரும் கையில் மெழுகுவர்த்தி எந்தியும், தீப்பந்தம் ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.