Skip to content
Home » மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

மாணவியிடம் அத்து மீறல்…. பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்

  • by Senthil

திருச்சியில் உள்ள பிரபலமான கல்லூரி பிஷப் ஹீபா் கல்லூரி.  சிறுபான்மையினர் நடத்தும் இந்த கல்லூரிக்கு அரசின் மான்யம் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை அனைத்தும் இந்த கல்லூரியில் உள்ளது.  தமிழ்நாடு முழுவதும் இருந்து பல ஆயிரம் மாண, மாணவிகள் இங்கு படிக்கிறார்கள்.  விடுதிகளிலும் தங்கி படித்து வருகிறார்கள்.

படிக்கிற வயதில் மாணவர்கள் தான் சேட்டை செய்வார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் இந்த கல்லூரியில் வேலியே பயிரை மேயும் கதை ஒன்று நடந்து உள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையை சேர்ந்த பேராசிரியர்  தமிழ்ச்செல்வன் என்பவர் தான் பயிரை மேய்ந்தவர். இவர் தன்னிடம் படிக்கும் ஒரு மாணவியை  படுக்கை அறைக்கு அழைத்து உள்ளார்.

இதற்கு மேல் அவர் கூறிய வார்த்தைகளை சொல்ல நமக்கே  அசிங்கமாக இருக்கிறது.  இந்த சம்பவம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த ஒழுக்கம் கெட்டவர் மீது கல்லூரி நிர்வாகம் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இதனால்  கல்லூரி நிர்வாகம்  தமிழ்ச்செல்வனை சஸ்பெண்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது போதுமானதல்ல. சட்டப்படி  அவரை  போலீசில் ஒப்படைக்கவேண்டும் . போக்சோவில் அவரை கைது செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

தமிழகத்தை கல்வியில் உயர்த்த வேண்டும் என தமிழக அரசு கோடிகோடியாக கொட்டிக்கொடுக்கிறது. இந்த நிலையில் இப்படியும் சில கறுப்பு ஆடுகள் உள்ளே புகுந்து  மாணவ சமுதாயத்தை சீரழிக்கிறது. எனவே இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை வேண்டும் என மாணவர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!