நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த அருட்தந்தை பேராசிரியர் முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இவர் ரோம் வாடிகன் நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக இருந்தவர். திருச்சி புனிதப் பவுல் குருத்துவ கல்லூரியின் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றியவர்.
ஆசிய ஆயர் பேரவையின் இறையில் பணிக் குழுவின் நிர்வாக செயலாளர் ஆக பணியாற்றியவர். இறுதியாக ஆசியா பன்முக கலாச்சார மையத்தை நிறுவி அதன் இயக்குனராக செயல்பட்டார்.
திருச்சபைக்கும் தமிழக திரு அவைக்கும் விடுதலை இறையியலில் மாபெரும் பங்காற்றிய பேராசிரியர் அவர்களுக்கு தான் இறையியல் பேராசிரியராக பணியாற்றிய திருச்சி புனித பவுல் மருத்துவக் கல்லூரியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தந்தை வில்பிரட் அவர்கள் விடுதலை இறையியலில் அதிகம் நாட்டம் கொண்டவர். பல்வேறு குருத்துவ கல்லூரிகளில் பேராசிரியராக பணிபுரிந்து குரு மாணவர்களின் மனதில் விடுதலை இறையியல் சிந்தனையை விதைத்தவர். தனது சீரிய சிந்தனையாலும்,எழுத்துக்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு விடுதலை பெற வேண்டும் என முழங்கியவர். சிறந்த பல இறையியல் புத்தகங்களை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கியவர். சிறந்த பல இறையியல் புத்தகங்களை கத்தோலிக்கு வழங்கியவர். இறையலாக்கும் என்பது வகுப்பறையை தாண்டி சாமானிய மக்களின் வாழ்வோடு தொடர்புடைய ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர். புதிய இறையியல் சிந்தனைகளையும், செயல் முறைகளையும் சிந்தித்தவர்,சிந்திக்கத் தூண்டியவர், செயல்படுத்தியவர். தந்தையின் பிரிவு அகில உலகத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கும் , கத்தோலிக்க மக்களுக்கும் மாபெரும் அகில உலக ஆயர் பேரவைக்கும் பேரிழப்பாகும் என ஆயர் பேரவை இரங்கல் தெரிவித்துள்ளது.
அவரது உடலுக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ், திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், சிவகங்கை மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம், குடந்தை மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம், பெங்களூரு மறை மாவட்ட ஆயர் சூசை நாதன், திருச்சி புனித பவுல் குருமட அதிபர் ஆண்ட்ரூ டிரோஸ், துணை அதிபர் சேவியர் லாரன்ஸ் உள்பட பல்வேறு அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள் அஞ்சலி செலுத்தினர்.