ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் பழங்குடியின வளர்ச்சித்துறை மந்திரி பாபுலால் கார்டி நேற்று உதய்ப்பூரில் நடந்த பொதுநிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது,
பசியுடனும், வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார். வேறு என்ன பிரச்சினை உங்களுக்கு?’ என்றார்.
உதய்ப்பூர் மாவட்டம் ஜோடல் தொகுதியில் வெற்றிபெற்ற பாபுலாலுக்கு 2 மனைவிகள் மூலம் 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.