தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சிச் சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஏதுவாக பேட்டரியால் இயங்கும் வாகனம் நேற்று முதல் இயக்கப் பட்டன. இதை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச் செல்வம் தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி, செயல் அலுவலர் கார்த்திக் கேயன், திமுக மாவட்ட துணைச் செயலர்கள் அய்யா ராசு, துரை முருகன், பாபநாசம் தெற்கு ஒன்றியச் செயலர் நாசர், பாபநாசம் பேரூர் செயலர் கபிலன், கவுன்சிலர்கள் ஜாபர் அலி, பால கிருஷ்ணன், கீர்த்தி வாசன், பிரேம்நாத் பைரன், திமுக பிரமுகர்கள் செல்வமுத்துக் குமரன், சின்ன உதயா, அனிபா, நவநீத கிருஷ்ணன், வக்கீல் வெற்றிச் செல்வன், இளைஞரணி மணி கண்டன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு மஞ்சள் பை வழங்கப் பட்டன.