திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குவளக்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர் போலீசாரை கண்டதும் பைக்கை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த பைக்கை மீட்டு திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தியதோடு இது சம்பந்தமாக இரவு ரோந்து பணியில் இருந்த போலீசார் தகவல் குறிப்பு எழுதி வைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அந்த பைக் பைனான்ஸில் வாங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட பைக் உரிமையாளர்களிடம் கேட்டதாகவும் அவர்கள் பைக் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் உள்ளதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாரிடம் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் நிறுவனத்தினர் பேசி வண்டியை எடுத்துச் சென்று விட்டனர்.
இந்த நிலையில் திருவெறும்பூர் உட்கோட்ட சரகத்திற்கு புதிய டிஎஸ்பியாக ஜாபர் சித்திக் என்பவர் பதவி ஏற்றுள்ளார் அவர் கோப்புகளை பார்த்த பொழுது சம்பந்தப்பட்ட பைக் இங்கு இல்லை என்றும் அந்த பைக் நிதி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .இது சம்பந்தமாக குற்றவாளிகள் கைது செய்யப்படாததும் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த ஜாபர்சித்திக் இது குறித்து திருச்சி எஸ்பி வருண் குமாரிடம் முறையிட்டுள்ளார் அதன் அடிப்படையில் திருச்சி எஸ்பி சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் யார் இந்த தவறை செய்தார்கள் என்பதை கேளுங்கள் இல்லை என்றால் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட பைக் மற்றும் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் அனைவரையும் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என கூறியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஜாபர் சித்திக் திருவெறும்பூர் போலீசார் அனைவரையும் ஒன்று கூட்டி சம்பந்தப்பட்ட பைக் மற்றும் அதை ஓட்டி வந்த குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் இல்லை என்றால் நீங்கள் அனைவரும் ஆயுத படைக்கு மாற்றுவதற்கு எஸ் பி உத்தரவிட்டுள்ளார் என்று கூறியதோடு மட்டுமில்லாமல்
ஜாபர் சித்திக் அதிரடியாக நேற்று முன்தினம் மதியம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் எழுத்தர் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை அதிரடியாக வெளியேற்றிவிட்டு துவாக்குடி காவல் நிலையத்தில் இருந்த போலீசாரை கொண்டு வந்து எழுத்தர் மற்றும் பாதுகாப்பு பணிக்கு நியமித்தார். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் அந்த நிதி நிறுவனத்திடம் இருந்து சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்பு உடைய பைக்கை மீட்டதோடு இந்த வழக்கில் தொடர்புடைய அரிய மங்கலத்தை சேர்ந்த பாலாஜி, சந்தோஷ், ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரத்தினவேல் (எ) கோட்டர் ரத்தினவேல் என்பவன் ஏற்கனவே லால்குடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளான்.
இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
எஸ் பி யின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிகளிடம் பரபரப்பு பதட்டமும் பற்றிக் கொண்டது.
இனி யாரேனும் இதுபோன்று தவறுகள் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.