திமுக இளைஞரணி மாநில மாநாடு அடுத்த மாதம் 17ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திமுக இளைஞரணி செயலாளர் , அமைச்சர் உதயநிதி தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இளைரணி மாநில மாநாட்டையொட்டி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கட்சி சார்பில் இருசக்கர வாகன பேரணி இன்று தொடங்கியுள்ளது. இருசக்கர வாகன பேரணியை திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் இன்று தொடங்கி வைத்தார். அவரும் சிறிது தூரம் பைக் ஓட்டிச்சென்றனர்.
இந்த பேரணி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கு பெரியார், அண்ணா, கலைஞர், திருவள்ளுவர் மண்டலங்கள் என பெயரிடப்பட்டுள்ளது.
8 ஆயிரத்து 647 கிலோமீட்டர்கள் தூரம் மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த இருசக்கர வாகன பேரணி அடுத்த மாதம் சேலத்தில் மாநாட்டு திடலில் நிறைவடைய உள்ளது. இந்த வாகன பேரணி234 சட்டமன்ற தொகுதிகளிலும் சென்று வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.