Skip to content
Home » போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

போதையில் பைக் ஓட்டிய வாலிபர் மின்கம்பத்தில் மோதி பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதி கிராமம் வேலாயுதம் தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் மணிவண்ணன் (20). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நண்பரின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று சாப்பிடுவதற்காக மாலை செம்பனார்கோவில் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.  மது போதையில் இளைஞர் வாகனத்தை வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது, எதிரே வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக மணிவண்ணன் ஒட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது உரசியதில் நிலைதடுமாறி செம்பனார்கோவில் காவல் நிலையம் அருகே உள்ள மின் கம்பத்தில்  மணிவண்ணன் மோதியுள்ளார். இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்த நிலையில் மணிவண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி மணிவண்ணன் உயிரிழந்தார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் வெகுநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றும் இளைஞர் உயிருக்கு போராடிய நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல யாரும் உதவ முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டார்.

மேலும் விபத்துக்குள்ளான மணிவண்ணன் இறுதியாக தனது வாழ்க்கை முடிந்து விட்டது எனக் கூறி கதறி அழும் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!