பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். கடந்த வருடம் இந்த ஆட்சி அமைந்தது. இந்தியா கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்துவதில் தீவிரமாக இருந்த நிதிஷ்குமார், தற்போது பாஜகவுடன் உறவை புதுப்பித்துக்கொண்டார். இந்த நிலையில் அவர் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். குறிப்பாக லாலுவுக்கு எதிராக பல கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த நிலையில் பீகார் அரசை கலைத்து விட்டு மக்களவை தேர்தலுடன் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து பீகார் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும் திட்டம் வைத்துள்ளார். இதற்காக இன்று மாலை 4மணிக்கு நிதிஷ்குமார், மாநில கவர்னர் ஆர்.பி. அர்லேகரை சந்திக்க புறப்பட்டு சென்றார். அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை அவர் கொடுப்பார் என்ற பரபரப்பு இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.