கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் அபிராமி,கலாஷேத்ரா விவகாரம் குறித்தும் பேசினார். அவரும் கலாஷேத்ரா முன்னாள் மாணவி. ஒரு தரப்பில் இருக்கும் குற்றச்சாட்டை மட்டும் வைத்து பேசக்கூடாது. இதன் மறுபக்கத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். நான் இந்த கல்லூரியில் பயின்ற போதெல்லாம் இதுபோன்ற எந்தவித சம்பவமும் நடந்ததில்லை. கலாஷேத்ரா என்கிற பெயரை ஒழுங்காக கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை சொல்வதை பார்க்கும் போது மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அதைப்பற்றி அப்போதே பேச வேண்டும். இதேபோல் ஒருவர் ஏற்கனவே செய்திருக்கிறார் என கூறியிருந்தார். மேலும் இதுகுறித்து பேட்டி அளித்த நடிகை அபிராமி, தான் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தபோது இதுபோன்று நடந்ததில்லை. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. ஹரிபத்மன் மிகவும் நல்லவர் என பேட்டி அளித்து இருந்தார்.
அவரின் இந்த பேட்டியை பார்த்த நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார். அதில் “நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த பீலும் உங்களுக்கு இருக்காது. ஆனால் மற்ற பெண்களும் அப்படியா? என அபிராமியிடம் கேள்வி எழுப்பி இருந்தார் குட்டி பத்மினி. இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “திரைத்துறையில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை மாதிரி இருக்க மாட்டார்கள் குட்டி பத்மினி ஆண்ட்டி. உங்களுக்கு எந்த பீலிங்கும் வரவில்லை என நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் உங்களுக்கே பத்திக்கிட்டு வருதுன்னா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்குறோம் ஆண்ட்டி. இந்த வயசான காலத்துல நீங்க உடம்ப பாத்துக்கோங்க” என்று பதில் கொடுத்து இருக்கிறார். இவர்கள் இருவரின் பேச்சுகளும் பதில்களும் வைரலாகி வருகின்றன.