Skip to content
Home » தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்…6.51 லட்சம் வாக்காளர்கள்

தமிழகத்தில் பெரிய சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர்…6.51 லட்சம் வாக்காளர்கள்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  நேற்ற வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும் மற்றும் 18 வயது நிறைவடைந்த ஆண்டின் அடுத்த காலாண்டில் தகுதியான இளைஞர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். 2023 வாக்காளர் பட்டியல் 31.5.2023 வெளியிடப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களாக 1,23,064 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. 51,295 வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முகவரி மாற்றம் செய்து உள்ளனர். 9,11,820 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.  2,60,103 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,01,18,904; பெண் வாக்காளர்கள் 3,11,09,813, மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர்)உள்ளனர். மேலும், 31.5.2023 அன்று வெளியிடப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட 27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது.

இத்தொகுதியில் மொத்தம் 6,51,077 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,26,253; பெண்கள் 3,24,713; மூன்றாம் பாலினத்தவர் 111). வாக்காளர் பட்டியலில் இதுவரை, 4,34,583 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிக்கப்பட்டு உள்ளார்கள்.

மேலும், 18-19 வயதுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 8,80,612. வாக்காளர் பட்டியலினை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான https://elections.tn.gov.in/ என்ற வலைதளத்திலும் காணலாம். அதில் வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 1.4.2023 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *