திருச்சி அருகே உள்ள பெல் நிறுவனத்தில் செயல்படும் ஆர் எஸ் கே பள்ளி தான்தோன்றி தனமாக செயல்படுவதாக கூறி பெல் நிறுவனத்தின் பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் தங்களது தேர்வுகளை முடித்து விடுமுறை விட வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி தனியார் பள்ளிகளுக்கு குறித்த தேதிக்குள் தேர்வுகளை நடத்தி விடுமுறை அளிப்பதற்கு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மதிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தின் வளாகத்தில் செயல்படும் ஆர் எஸ் கே சி பி எஸ் இ பள்ளியில் தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்துள்ள நிலையில் கோடை வெப்பத்தில் பள்ளி மாணவ மாணவிகள் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் தேர்வு அட்டவணையை தான்தோன்றித்தனமாக மாற்றிய வெளியிட்டுள்ளதாகவும்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல் நிறுவனத்தின் அனைத்து பங்குபெறும் தொழிற்சங்கங்கள் சார்பில் பெல் மனிதவளத்துறை பொது மேலாளர் மற்றும் ஆர்.எஸ்.கேபள்ளி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இருந்தும் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல் தங்களது பணியில் ஜருவராக ஈடுபட்டதை தொடர்ந்து
பெல் அனைத்து பங்குபெறும் தொழிற்சங்கம் சார்பில் அதன் கூட்டு குழு ஒருங்கிணைப்பாளரும் தோமுச தொழிற்சங்க பொதுச் செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் பெல் ஆர் எஸ் கே பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி நிர்வாகமான டிஏவி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இது சம்பந்தமாக பெல் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக கூடுதல் பொது மேலாளர் பிரகதீஸ்வரி, முதுநிலை மேலாளர் ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததோடு உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.