Skip to content
Home » திருச்சி பெல் ஊழியர் வீட்டு கிச்சனில் பாம்பு….

திருச்சி பெல் ஊழியர் வீட்டு கிச்சனில் பாம்பு….

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் இவரது வீட்டில் சுமார் 6 அடி நீளம் உள்ள பாம்பு நுழைந்துள்ளது. இதனை பார்த்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் உடனடியாக நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர்

திருநாவுக்கரசு வீடு முழுவதும் பாம்பை தேடி பார்த்த பொழுது சமையல் கட்டிற்குள் பாம்பு நுழைந்து இருந்தது தெரியவந்தது . உடனடியாக அதனை பிடித்து பார்த்த பொழுது அது சாரை பாம்பு என்பது தெரிய வந்தது. சுமார் 6 அடி நீளம் இருக்கும் அப்படி பிடிபட்ட அந்த சாரைப்பாம்பை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விடுவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *