திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம் இங்கு பணிபுரிபவர் அன்பு ஆதவன் இவரது மனைவி ஆர்த்தி
இவர்களது 2.7 வயது குழந்தை ஹர்ஷவர்த்தன் உலக தலைவர்களின் புகைப்படத்தை காட்டி அடையாளம் காண்பது வாகனங்களின் பெயர்களை கூறுவது, பழங்கள் பெயர்கள், ஆத்திச்சூடி உள்ளிட்ட 26 விதமான அடையாளங்கள் பற்றி உடனுக்குடன் அடையாளப்படுத்தி கூறியதால் குழந்தையின் அசாத்திய திறமையை பாராட்டி குழந்தைக்கு சோழன் உலக சாதனை புத்தகம் சார்பில் விருது வழங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான விருது வழங்கும் விழா திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மனமகிழ் மன்றத்தில் நடந்தது.
விழாவிற்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் நிமலன் நீலமேகம் தலைமை வகித்தார். மனமகிழ் மன்ற மகளிர் தலைவி சாந்தி ரவீந்திரன் முன்னிலை வகித்தார் பெல் நிறுவன பொது மேலாளர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஹர்ஷவர்த்தனுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவன விருதை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில் பெல் ஊழியர்கள் மற்றும் பெல் ஊரக பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் திருச்சி மண்டல தலைவர் கராத்தே செல்வராஜ் செய்திருந்தார்.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2025/02/sirumi07.jpg)