திருவெறும்பூர் அருகே உள்ள திருவேங்கட நகரை சேர்ந்தவர் தனசேகர், இவரது மகன் சுரேஷ் (40) இவருக்கு ஐஸ்வர்யா ( 34 ) என்ற மனைவி உள்ளார்.
சுரேஷ் திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷ் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது அப்படி வாங்கிய கடன் சம்பந்தமாக குடும்பத்தாருக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் தன்னுடன் வேலை பார்ப்பவரிடம் தனது வீட்டையும் சுரேஷ் விற்று உள்ளார் இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுரேஷ் தனது பைக்கை எடுத்துக்கொண்டு கடந்த 28ம் தேதி பெங்களூர் செல்வதாகவும் 30ம் தேதி வீட்டிற்கு வருவதாகவும் கூறி சென்றுள்ளார்.
ஆனால் சுரேஷ் இதுவரை வீடு திருப்பவில்லை. பல இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக சுரேஷின் மனைவி ஐஸ்வர்யா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சுரேஷை தேடி வருகின்றனர்.