Skip to content
Home » பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

பாரத் நியூ-எனர்ஜி நிறுவனத்தின் BNC… புதிய ஷோரும் திருச்சியில் திறப்பு…

கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BNC மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய வாடிக்கையாளர் அனுபவ மையத்தை திருச்சியில் திறந்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் BNC மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய அனுபவ மையம் எண்.1E, கிழக்கு சிந்தாமணி, காவேரி பாலம், சென்னை டிரங்க் சாலை, சின்னக்கடை தெரு, திருச்சி – 620002 என்ற முகவரியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் புதிய அனுபவ மையத்தை திறந்து வைத்து, BNC சேலஞ்சர் எஸ்110 மின்சார வாகனத்தையும் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு பணிகளுக்கு ஏற்ற வகையில் இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் நகர்புறத்திற்கு ஏற்ற வகையிலும், கரடுமுரடான பகுதிகளிலும் செல்லும் வகையிலும் வடிவமைத்துள்ளது.

திருச்சியில் திறக்கப்பட்டுள்ள BNC ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள், அதிநவீன மின்சார மோட்டார் வாகனங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், அதை அனுபவித்து பார்க்கவும் மற்றும் வாங்குவதற்கான

மையமாகவும் செயல்படும். மின்சார வாகனங்கள் தொடர்பான தொழில்நுட்பம், சோதனை ஓட்டம் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சிறப்பான சேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், எங்களின் மின்சார மோட்டார் வாகனங்களை திருச்சிக்கு கொண்டு வருவதிலும், எங்களின் புதிய BNC சேலஞ்சர் எஸ்110ஐ சந்தையில் அறிமுகம் செய்வது குறித்தும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். 2-ம் கட்ட நகரங்களில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது, இதை கருத்தில் கொண்டு நாங்கள் தற்போது எங்களின் மையத்தை திருச்சியில் திறந்துள்ளோம்.

இந்த புதிய ஷோரூம் இப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, எங்களின் புதுமையான மின்சார மோட்டார் வாகனங்களை கொண்டு செல்வதற்கும் அதை அவர்கள் எளிமையாக கையாளுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

BNC சேலஞ்சர் எஸ்110 – Etrol-40(எட்ரோல்-40) என்று பெயரிடப்பட்ட வகையான பேட்டரி, எளிமையாக கையாளக்கூடிய வகையிலான 2.1 கிலோ வாட்ஹௌர் கொள்ளளவு கொண்டது மற்றும் கையடக்க சார்ஜருடன் கிடைக்கிறது.

Etrol-40 பேட்டரி அதிகபட்ச பாதுகாப்பை கொண்டிருப்பதோடு, இதற்கு ஏஐஎஸ்-156, திருத்தம் – 3, பேஸ் – 2 தரச் சான்றிதழ் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 5 ஆண்டு அல்லது 60 ஆயிரம் கி.மீ உத்தரவாதத்தை BNC நிறுவனம் வழங்குகிறது, அத்துடன் பாடி-சேஸ்ஸிக்கு 7 ஆண்டுகளும், பவர்டிரெய்னுக்கு 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது. சேலஞ்சர் எஸ்110ஐ பொறுத்தவரை அதிகபட்ச தூரம் 90 கி.மீ. ஆகவும், அதிகபட்ச வேகம் மணிக்கு 75 கி.மீ. ஆகவும், 200 கிலோ எடையை சுமந்து கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வசீகரமான தோற்றம், வலிமைமிக்க பாடி-சேஸ் ஆகியவை, அனைத்து பாதைகளிலும் செல்லக்கூடிய வகையிலும், அனைவருக்கும் ஏற்ற வகையிலும் சிறப்பாக வடிவமைக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!