பகத்சிங் 94 வது நினைவு தினத்தையொட்டி, மாவட்ட தலைநகர் அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பகத்சிங் திருவுருவப்படத்திற்கு பூ மாலை அணிவித்து புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் T, தண்டபாணி பேசும் போது, பிரிட்டிஷ் ஆட்சியரிடமிருந்து இந்திய நாடு விடுதலை பெற வேண்டும் என்பதோடு, இந்திய பெரு முதலாளி மற்றும் நில பிரபுக்களிடமிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டும், சோசலிசம் மட்டும்தான் முழு சுதந்திரம் வழங்கும் என்ற மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தோடு புதிய சமூகத்தை படைக்க புரட்சிக்காரனாக செயல்பட்ட பகத்சிங் – ராஜகுரு – சுகதேவ் ஆகிய இளம் போராளிகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1931 மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டு உயிர்த் தியாகம் செய்திட்ட 94 ஆவது நினைவு தினமான இன்று, நாமெல்லாம் முன்னோர்களின் தியாகங்களை உரமாக எடுத்துக்கொண்டு, இன்றும் சுரண்டலும் வர்க்க பேதமும் – மக்கள் விரோத அரசும் தொடர்கிறதை மாற்றிட நமது வேலைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர வேண்டும், என தோழர் T, தண்டபாணி பேசும்போது குறிப்பிட்டார். புகழஞ்சலி கூட்டத்தில் CPI அரியலூர் ஒன்றிய செயலாளர் து, பாண்டியன், அரியலூர் நகரச் செயலாளர் ந,கோவிந்தசாமி, இளைஞர் பெருமன்றம் பெ,பெரியசாமி, க, மாவீரன், கு, விக்னேஷ், அரியலூர் நகராட்சி ஏ ஐ டி யு சி க, பெருமாள், நாகமங்கலம் கிளை S, பிச்சை பிள்ளை, மூ, தையல்நாயகி, அஞ்சலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பகத்சிங் 94வது நினைவு தினம்… அரியலூரில் புகழஞ்சலி கூட்டம்
- by Authour
