கர்நாடகாவைச் சேர்ந்த லிங்காயத்து மடாதிபதி சித்தகங்கா சிவகுமார சுவாமி கடந்த 2019-ம் ஆண்டு தனது 111-வது வயதில் காலமானார். அவருக்கு பெங்களூரு வீரபத்ர நகரில் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கடந்த நவம்பர் 30-ம் தேதி இரவில் தார் பூசி அவமதிக்கப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் உணவு டெலிவரி ஊழியர் கிருஷ்ணா (33) என்பவரை கைது செய்தனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி, உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவது தெரியவந்தது. கைதான கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, இயேசு கிறிஸ்து அண்மையில் கனவில் வந்து விக்கிரக வழிபாட்டை போதிப்பவர்களை அழிக்க சொன்னார். அதனால் மடாதிபதியின் சிலைக்கு தார் பூசினேன்” என கூறியுள்ளார். இதையடுத்து கிருஷ்ணாவை பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.