விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தை தொடர்ந்து அடுத்த பாகத்திற்கான அப்டேட்டையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிச்சைக்காரன். தாய் பாசத்தை மைய்யமாக கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட்டான இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் வெளியானது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, நடித்து, இசையத்து, படத்தொகுப்பும் செய்திருந்தார். இந்த படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேராடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகிபாபு என பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த படம் தெலுங்கில் ‘பிச்சகாடு2’ என்ற பெயரில் வெளியானது.
வசூல் வேட்டை நடத்திவரும் இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதாவது “ பிச்சைக்காரன் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களை தொடந்து மூன்றாவது பாகமும் வெளியாகவுள்ளது, ஆனால் இந்த பாகம் முந்தைய பாகம் போல் அல்லாமல் வித்தியாசமான கதைகளத்துடன் இருக்கும், பெரும்பாலும் நானே படத்தை இயக்குவேன்” என தெரிவித்துள்ளார்